• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராணியைத் தேடி பல கிலோமீட்டர் பறந்து வந்த தேனீகள்.

June 2, 2016 தண்டோரா குழு

இனிப்பு என்றால் உடனே நம் நினைவிற்கு வருவது தேன் ஆகும். சிறியவர் முதல் பெரியவர் முதல்
இதை விரும்பி உண்பர். நான்கு மாதம் முடிந்த குழந்தைகளுக்கு காலையில் அதன் வாயில் ஒரு
சொட்டு தேன் கொடுப்பார். அப்படிக் கொடுத்து வந்தால் குழந்தையின் குரல் இனிமையாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு. அந்தத் தேனுக்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டால் அதற்கு உடனே வரும் பதில் “தேனீ” என்று.

தேனீ இனத்திலேயே மிகச்சிறந்த தேனீ ஐரோப்பியத் தேனீ தான். ஏனெனில் அந்த தேனீகள் தான் உலகின் மிகச்சிறந்த தேனையும், மெழுகையும் தருகிறது. இந்தத் தேனீ கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது ராணித் தேனீதான். அந்த ராணித் தேனீக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால்
மற்ற போர் வீரர் தேனீகள் ஒன்றாகச் சேர்ந்து ராணி தேனியை காப்பாற்றும். அல்லது அந்தக்
கூட்டின் அருகிலேயே இறந்துவிடும்.

பெம்புரோக்‌ஷயர் கடற்கரை தேசிய பூங்காவைச் சேர்ந்த டாம் மோசஸ் என்பவர் நிறுத்தியிருந்த காரின் பின்பகுதியில் தேனீக்கூட்டம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்தத் தேனீ
கூட்டத்தை அனைவரும் படம் எடுப்பதைப் பார்த்த அவர் கேமராவின் பிளாஷ் ஒளியாலும் அவர்களால் ஏற்படும் சத்தத்தினாலும் தேனீகள் கொல்லப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் பெம்புரோக்‌ஷயர் தேனீ வளர்ப்புக் கழகத்தை அழைத்து தேனீகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் படி வேண்டுகோள் விடுத்தார்.

அதன் பிறகு, பிரச்சினை முடிந்து விட்டது என்று நினைத்த அவர் நிறுத்தி வைத்திருந்த காரை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார். ஆனால், மறுநாள் காலை காரைப் பார்த்த போது மீண்டும் தேனீக்
கூட்டம் காரின் பின்பகுதியை மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். அதன் பிறகு
மீண்டும் தேனீ வளர்ப்புக் கழகத்தினரைத் தொடர்பு கொண்டு அவற்றைப் பாதுகாப்பாகப்
பிடித்துச் செல்ல கேட்டுக்கொண்டார்.

பொதுவாக தேனீகள் தங்கள் ராணித்தேனீயின் வழிகாட்டுதலுடன் கூட்டமாகச் செல்லும். எனவே இம்முறையும் ராணித் தேனீயைப் பின்பற்றியே தேனீக்கூட்டம் வந்திருக்கும் என்று முதலில் தேனீ வளர்ப்புக் கழகத்தினர் நினைத்தனர். ஆனால் அம்மாதிரியான ராணித்தேனீ அந்த காருக்குள் இல்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆனாலும் ராணி தேனியை தேடி பல கிலோமீட்டர் தூரம் காரைத் தொடர்ந்து வந்தது மட்டுமின்றி தன்னுடைய கூண்டில் இருந்த அனைத்து தேனீகளுக்கும் தகவல் கொடுத்து அழைத்து வந்தது அந்த
தேனீகளின் மோப்ப சக்தியை பறைசாற்றுவதாக இருந்தது.

மேலும் படிக்க