• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகின் பழமையான பீர் தயாரிக்கும் முறை கண்டுபிடிப்பு.

June 2, 2016 தண்டோரா குழு

நாம் வாழும் இந்த 21வது நூற்றாண்டில் பல நவீன முன்னேற்றங்களை நாம் பார்த்து வருகிறோம். இன்றைய மக்களின் ரசனைகளில் பல வித மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.

ஆனால் சிலருக்கு பழைய வாழ்க்கை முறையை எளிதில் மறந்து விடுவது இல்லை. உணவு தயாரிப்பில் பல புதிய முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலும் தாங்கள் உண்டு அனுபவித்த உணவு பழக்க வழக்கங்களை எளிதில் மாற்றுவதோ அல்லது மறந்து போவதோ இல்லை. அந்த வகையில் குடித்துப் பழகியவர்கள் பழைய காலத்து பீர் போல

தற்போது வரும் பீர் இல்லை எனக் கூறுவது வாடிக்கை. சுமார் 4,900 முதல் 5,400ம் ஆண்டுகளுக்கு இடையே உள்ள உலகின் மிகப் பழமையான மதுபானம் தயாரிப்பு முறை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வட சீனாவில் உள்ள மிஜியாய தொல்பொருள் தளத்தில் இந்த மது பானத்தை தயாரிக்கும் முறையைக் குறித்த ஆவணங்கள் மற்றும் அதைத் தயாரிக்க உபயோப்படுத்தப்பட்ட கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கண்டுபிடித்த கருவிகளில் மஞ்சள் நிற பொருள்கள் படிந்து இருப்பதைக் கவனித்தனர். அதை ஆய்வு செய்த போது அது பீர் வகையைச் சேர்ந்த மது பானம் எனக் கண்டுபிடித்தனர்.

பின்னர் அதனுடன் இருந்த குறிப்புகளை வைத்து அதைத் தயாரிக்கும் முறைகளை அறிந்து கொண்டனர். அந்தக் குறிப்பில் இருக்கும் தயாரிப்பு முறை தற்போதுள்ள தயாரிப்பு முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இந்தப் பழமையான முறையில் சீன மக்களால்

பயன்படுத்தப்பட்ட ஒரு வகையான சோளம், காட்டுக் குந்துமணி மற்றும் கிழங்கு வகைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருந்தன. கண்டுபிடிக்கப்பட்ட தயாரிப்பு முறையைச் சோதனை செய்த போது அந்தத் தானியங்கள் அவர்கள் எதிர்ப்பர்ப்பின் படி சரியாக இருந்தது.

பீர் மது பானத்தை தயாரிக்கும் உலகின் பழைய செய்முறையைக் கண்டுபிடித்து அதன்படி தயாரித்துப் பார்த்ததில் அந்தச் சுவையை எட்ட நாம் இன்னும் பல ஆண்டுகள் பயணம் செய்யவேண்டி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும், வட சீனாவில் அரிசி, தேன் மற்றும் பழங்களை கொண்டு தயாரிக்கும் கலவையை சுமார் 9,000 ஆண்டுகள் முன் பழக்கத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க