June 4, 2016 தண்டோரா குழு
பீகாரில் ப்ளஸ் 2 தேர்வில் கலை பிரிவில் முதலிடம் பிடித்துள்ள மாணவி அரசியல் அறிவியல் என்றால் அது சமையலை பற்றி என்று தெரிந்து கொள்வது எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
பீகாரில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் கலை பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ள மாணவி ரூபி குமாரி, அரசியல் அறிவியல் என்றால் சமையலை பற்றியது எனத் தெரிவித்து அதிர வைத்துள்ளார். ப்ளஸ் 2 தேர்வில் அறிவியல் பிரிவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து ரேங்க் வாங்கியுள்ள மற்றொரு மாணவனுக்கு அறிவியல் பாடம் பற்றி அடிப்படை கூட தெரியவில்லை.
கலை மற்றும் அறிவியல் பிரிவில் முதலிடம் பெற்ற இருவரும் ஒரே வைசாலி மாவட்டத்தில் உள்ள பகவான்புர் நகரில் உள்ள பிஸுன் ராய் கல்லூரியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பீகார் மாநில கல்வித்துறை அமைச்சர் கூறும்போது, மாநிலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார். மேலும் கல்வி நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு மாணவ மாணவிகளின் எடுத்துள்ள மதிப்பெண்கள் ஆராயப்படும். விசாரணையில் முடிவில் தவறு செய்த கல்வி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.