• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பீகார், பல்கலைக்கழகம் முதல் ஊழல் வரை.

May 6, 2016 தண்டோரா குழு

பீகார் என்றாலே படிப்பறிவில்லாத மக்கள், முரட்டுத்தனம் கொண்ட மக்கள் என பல்வேறு தரப்பினரும் கருதி வருகின்றனர். ஆனால் முதன் முதலில் துவங்கப்பட்ட பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் அங்குதான் உள்ளது என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்.

ஒரு காலத்தில் கலாச்சாரத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்த பிகார் மாநிலம் பின்னர் பல்வேறு தரப்பு ஆட்சிக்காலத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறியது காலத்தின் கொடுமைதான். உலகமெங்கும் இருந்து கல்வி கற்க பிகார் வந்து சென்ற பெருமையைக் கொண்டது அந்த மண். ஆனால் தற்போது அங்குதான் அதிக படிப்பறிவு இல்லாதவர்களும், முரட்டுத்தனம் கொண்ட மனிதர்களும் உள்ள மாநிலமாக உள்ளது.

ஊழல், அரசியல் கோமாளித்தனங்கள் ஆகியவற்றிற்குப் பெயர்பெற்ற பிகாரில் மாட்டிற்குத் தீவனம் வாங்கிய வகையில் 900கோடி ரூபாய் ஊழல் செய்ததாக முதல்வர் தகுதி இழந்த சம்பவம் பிரசித்தி பெற்றது. மேலும் அதைத் தொடர்ந்து அவரது மனைவியை முதல்வராக்கி நிழல் முதல்வராக இருந்து ஆட்டி வைத்த சம்பவம் அரசியலின் உச்சபட்ச கேவலம் என உலக நாடுகள் கிண்டலடித்து வந்தன.

இது போன்ற நிலையில் தற்போது புதிதாக ஒரு மோசடி வெளியாகியுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அருமையான திட்டத்தில் ஒன்று ராஷ்டிரிய ஸ்வஸ்தயா பீமா யோசனா திட்டம்.

இத்திட்டத்தின் படி எந்த நோயானாலும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு வருடத்திற்கு 30,000 ரூபாய் தரப்பட்டு வந்தது.

இதன் மூலம் ஏழை மக்கள் தங்கள் உடல் நலனை நன்கு பேணிக்காக்க முடியும் அரசு நினைத்தது.

ஆனால் ஏதாவது ஒரு நல்ல திட்டம் இருந்தால் அதைக் கெடுத்து அதில் மோசடி செய்வது எப்படி என அங்குள்ள அதிகாரிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் சொல்லித்தரவேண்டியது இல்லை. அவர்கள் உடனடியாக கண்டுபிடித்து விடுவார்கள். ஏனெனில் அவர்களது தலைமை அப்படி.

இந்தத் திட்டத்தில் பல ஏழைக் குடும்பங்கள் பயனடைந்தாலும் அதைக் காசாக்க நினைத்த அரசு அதிகாரிகள், மருத்துவமனை உரிமையாளர்கள் மற்றும் காப்பீடு திட்ட அதிகாரிகள் தவறான முறையில் பயன்படுத்தினர்.

இது குறித்து சமஸ்டிபூர் மாவட்ட நீதிபதி குந்தன் குமாரிடம் பல புகார்கள் கொடுக்கப்பட்டன.

அதில் பல மாவட்டங்களில் மருத்துவர்களே இல்லாதவர்கள் வைத்தியம் பார்த்ததாகவும், அறுவை சிகிச்சையே செய்யாமல் செய்ததாக கணக்குக் காட்டுவதாகவும் புகார் கூறப்பட்டிருந்தது. எனவே நீதிபதி ஒரு தனிப்பட்ட மருத்துவக் குழுவை அனுப்பி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்களைப் பரிசோதிக்கும்படி ஆணையிட்டார்.

முதற்கட்ட விசாரணையில் 2011 ம் ஆண்டு 15,000 பெண்களுக்கு கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்தது. அதில் 2,606 பெண்களுக்கு மறு பரிசோதனை செய்ததில் 316 பெண்களின் ஆரோக்கியமான கருப்பை அகற்றப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்னும் பலபேருக்கு உடலில் பெயரளவில் ஒரு காயத்தை ஏற்படுத்தி அறுவை சிகிச்சை போல் சித்தரித்து காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

சாம்ஸ்டிபூர், பீகுசாராய், மதுபானி, சாரான் போன்ற பல மாவட்டங்களில் சுமார் 16,765 அறுவை சிகிச்சைகள் 2010 – 2012 நடைபெற்றுள்ளதாக அறிக்கை தெரிவித்தது.

இவை அனைத்திலும் தனியார் மருத்துவமனைகள், அரசு அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றிற்குப் பங்கு உள்ளது எனவும் அம்பலப்படுத்தப்பட்டது.

ஒரு சில குடும்பங்கள் தங்கள் வறுமையின் காரணமாக தாங்களாகவே முன் வந்து சிகிச்சை செய்து கொண்டதும் உண்டு.

இந்த மோசடிகள் வெளிவந்தவுடன் பீகார் ஹுயூமன் ரைட்ஸ் கமிஷன் 2012 ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 708 பெண்களுக்கு 18 கோடி ரூபாய் இழப்புத் தொகை பெற்று வழங்கியது.

இதில் இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால் அதிகளவிலான இளம் பெண்களுக்கும் இந்தச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது தான்.

பிகார் மனித உரிமை கமிசன் தலைவர் பிலால் நாஸ்கி, இத்தொகையைச் சிகிச்சை பெறாத பெண்களும் பங்கிட்டுக் கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

முதன் மந்திரி நிதீஷ் குமார் ஆணைப்படி மனித உரிமை கமிசன் அரசின் திட்டத்திலுள்ள குறைகளைக் களைய முற்பட்டுள்ளது.

மேலும் அக்குழு 540 பெண்களுக்கு அவர்களது வயதின் அடிப்படையில் 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை இழப்புத் தொகையாக வழங்கியது.

இன்னும் பல பெண்களின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

எனவே பீகார் என்றாலே புது புது மோசடிகளைக் கண்டுபிடிக்கும் மாநிலம், என்ற பெயரை வாங்கியுள்ளது.

மேலும் படிக்க