• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிங்கி சோனகருக்கு கிடைத்த புதுவாழ்வு.

June 11, 2016 தண்டோரா குழு

கடந்த ஆண்டு இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள கிராண்ட் சென்டர்மைதானத்தில் நடைபெற்ற ஆடவருக்கான விம்பிள்டன் ஒற்றையர் போட்டியில் டாஸ்போடும் வாய்ப்பு, 11 வயது இந்தியச் சிறுமியான பிங்கி சோனகர்ருக்கு கிடைத்தது.

இந்தச் சிறுமி பிங்கி யார்? அவருக்கு இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது எனப் பார்த்த போது தான், ஸ்மைல் பிங்கி என்னும் ஹிந்தி திரைப்படம் மூலம் இவளுடைய வாழ்க்கையே திசை மாறியது தெரியவந்தது.

பிங்கி சோன்கர் பிறவியிலேயே மேல் உதடு சீரற்று (அன்னப்பிளவு) இருந்த சிறுமி ஆவாள். இக்குறைபாட்டின் காரணமாக 5 வயது வரை பாடசாலைக்குச் செல்ல பெற்றோர்அனுமதிக்கவில்லை. வாரணாசியை அடுத்த மிர்ஷாப்பூர்யில் உள்ள ரம்பூர்டஹபா எனும் கிராமமே இவள் பிறந்து வளர்ந்த இடம்.

வறுமையின் காரணமாக உரிய மருத்துவர்களிடம் சிகிச்சை பெறப் பிங்கியால் முடியவில்லை. இந்நிலையில் தான்பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சுபோத் குமார் சிங் என்பவரைச்சந்திக்க நேர்ந்தது.

தி ஸ்மைல் ட்ரெயின் என்னும் செயற்திட்டத்தின் மூலம் அவரது மருத்துவமனையில்வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள சிறுவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை இலவசமாக இவர் உதவி வருகின்றார். இவர் பிங்கிக்கு அறுவை சிகிச்சை செய்யச்சம்மதித்தார்.

அதோடு, இந்தியாவில் இது போன்ற உடல் அழகைக் கெடுக்கும்குறைபாடுகளுடனும் பிறந்த குழந்தைகள் எத்தகைய கஷ்டங்களைச் சந்திக்கின்றனர்என்பதை உலகுக்கு வெளிப்படுத்தப் பிங்கியின் கதையைக் குறும்படமாக்க இவர் முடிவு செய்தார்.

இவருக்கு உதவி செய்ய பிரபல அமெரிக்க குறும்பட இயக்குனரான மேகன் மைய்லான்முன் வந்தார். இருவரும் சேர்ந்து பிங்கி சிகிச்சைக்கு முன்பும் அதற்குப் பின்பும் என இரு கட்டங்களாக 39 நிமிடம் ஓடக்கூடிய டாக்குமென்டரி குறும்படத்தைத் தயாரித்தனர்.

இந்தி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்ட இப்படம் 81 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் மிகச் சிறந்த குறும்படத்திற்கான விருதைப் பெற்றது.

அதுமட்டுமின்றி இவ்வெற்றிக்குப் பின்னர் சிறுமி பிங்கிக்கு நட்சத்திர அந்தஸ்தும்கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே அவர் விம்பிள்டன் போட்டியில் டாஸ்போட அழைக்கப்பட்டார்.

மேலும் படிக்க