April 5, 2022 தண்டோரா குழு
பி.என்.ஐ க்யூ சர்க்கில் தலைவர் அரிமா வினோத் சிங் ரத்தோர் தலைமையில் பி.என்.ஐ. க்யூ சர்க்கில் உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி குரூப் ஆப் கம்பெனியில் நடத்தியது.
பி.என்.ஐ இன்டர்நேஷனல் ஆர்கனிஷேசன் உலகளாவிய அளவில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பி.என்.ஐ. க்யூ சர்க்கிள் 2021 அக்டோபர் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரை 6 மாதம் காலமாக தலைவர் பதவியில் காவிரி குரூப் ஆப் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் அரிமா வினோத் சிங் ரத்தோர் பதவி வகித்துள்ளார்.
துணைத் தலைவராக நிஷாந்த் பைட், செயலாளர் மற்றும் பொருளாளராக பிரபு ஆகியோர் பதவிவகித்துள்ளனர்.அரிமா வினோத் சிங் ரத்தோர் இவரது ஆறு மாத பி.என்.ஐ கியூ சர்க்கில் பணியில் கோவை மாவட்டத்தில் 13 உறுப்பினர்களை இணைத்துள்ளார். மேலும் கோவை மாவட்டம் பசுமை நகரமாக மாற்றும் முயற்சியில் அனைவருக்கும் செடிகளை வழங்கி வருகிறார்.
இவரது இந்த முயற்சியில் பி.என்.ஐ நிறுவனர் டாக்டர் இவன் மிஸ்னர் மற்றும் சிஇஓ கிரஹம் ஆகியோர் பி.என்.ஐ கியூ சர்க்கிள் அமைப்பிற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இது குறித்து காவிரி குரூப் ஆப் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் அரிமா வினோத் சிங் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பி.என்.ஐ இன்டர்நேஷனல் உலகம் தரம் வாய்ந்த அமைப்பாக உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் 2021 அக்டோபர் முதல் மார்ச் 2022ஆம் ஆண்டு வரை ஆறு மாத காலமாக பி.என்.ஐ கியூ சர்க்கிள் தலைவராக பணி புரிந்துள்ளேன். இதில் அனைவரும் குடும்ப உறுப்பினராக செயல்பட்டு தொழில் வளர்ச்சியில் ஒன்று பட்டுள்ளோம். ஆறு மாத காலமாக நிறைவடைந்துள்ள இந்த பதவியில் பி.என்.ஐ கியூ சர்க்கில் உறுப்பினர்களுக்கு காவிரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் 36 உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என 45பேருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து உள்ளோம்.
பி.என்.ஐ கோவை மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கோவையில் தொழில் வளர்ச்சிக்கு பிஎன்ஐ ஒரு உந்து கோலாக உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலதிபர்களும் இந்த நெட்வொர்க் மூலம் ஒன்றிணைந்துள்ளனர் என்றார்.