October 12, 2017 தண்டோரா குழு
‘பாம்பே ஒ பாசிடிவ்’ ரத்தம் கிடைக்காமல் நோயாளிக்கு இருதய அறுவை சிகிச்சை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் பரமசிவம்(52).இவர் கேரளாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது திடீரென பக்கவாதம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நான்கு வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள் கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதை இன்று செய்துகொள்ளலாம் என கடந்த வாரம் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு இரண்டு யூனிட் ரத்தம் தேவைப்படும் என்பதால் அனைத்து நண்பர்கள் மற்றும் ரத்ததான அமைப்புகள் என பலரிடம் கேட்டும் பாம்பே ஒ ரத்த வகை கிடைக்காததால் இன்று நடக்க இருந்த இருதய அறுவை சிகிச்சை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரத்தம் கிடைத்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும்.இந்நிலையில் மிக அரிதான பாம்பே ஒ பாசிடிவ் ரத்த வகை இருக்கும் நபர்களின் எண்ணிக்கை கோவை ,ஈரோடு,திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் நான்குபேர் தான் இருக்கின்றனர். இவர்களது தொலைபேசி எண்களும் தவறாக உள்ளதால் ரத்தம் கிடைக்காமல் பரமசிவத்தின் குடும்பத்தினர் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இந்தியாவின் நிதி மூலதனமாக விளங்கும் மும்பையில் தான் புதிய ரத்த வகை கண்டறியப்பட்டது. அதற்கு பாம்பே ஓ பாசிடிவ் என்று பெயரிடப்பட்டது.
ரத்த அணுக்களில்“H antigen” இல்லாததால் “O”இரத்த குழுவிலிருந்து பாம்பே இரத்தக் குழு வேறுபடுகிறது. Rh நேர்மறை அல்லது Rh எதிர்மறையாக இருக்கலாம். இது இந்தியாவிலும், உலகிலும் மிக அரிதான இரத்தக் குழுக்களில் ஒன்றாகும். மும்பை போன்ற நகரம் இந்த இரத்த குழுவில் 35-40 இரத்த தானம் மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவில் பம்பாய் இரத்த குழு மொத்தம் 179 பேர் உள்ளனர்.
பாம்பே இரத்த பிரிவு என்றால் என்ன?
பம்பாய் இரத்தக் குழுவைப் புரிந்து கொள்ள நாம் இரத்தக் குழுவின் விவரங்களை புரிந்து கொள்ள வேண்டும். யாரோ இரத்தக் குழாயில் A என்று சொல்கிறார்களோ, அந்த நபருக்கு ‘A’ வகை மற்றும் ‘B’ என்ற வகை ‘B’ வகை ஆன்டிபாடின் தன் உடலில் உள்ளது என்று பொருள்.
AB உடன் உள்ள நபர்கள் A மற்றும் B ஆகிய இரண்டையுமே ஆன்டிஜென்ஸ் மற்றும் இரத்தத்தில் உள்ளனர். O இரத்த குழுவில் உள்ள நபர்கள் மட்டுமே A மற்றும் B மற்றும் ஆன்டிஜென்கள் இல்லை. இருப்பினும் பொதுவாக அறியப்படாதது, இந்த அனைத்து குழுக்களும் இரத்தத்தில் ஒரு ஆன்டிஜென் H ஐ கொண்டுள்ளன. அவற்றின் இரத்தத்தில் இந்த ஆன்டிஜெனே H இல்லையென்பது மிகக் குறைவு.
அதற்கு மாறாக அவர்கள் ஆன்டிபாடி H ஐ கொண்டுள்ளனர், இதன் காரணமாக வேறு எந்த இரத்தமும் கொடுக்கப்படாது. இந்திராகாந்திக்கு அரிதான ரத்த வகை இருந்ததால் அவரது ரத்த வகையை கொண்ட இருவரை பணிக்கு அமர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரிதான ரத்த வகையை கொண்ட பரமசிவத்தின் இருதய அறுவை சிகிச்சைக்கு, பாம்பே ஒ பாசிடிவ் ரத்த பிரிவைகொண்டவர்கள் தானம் கொடுத்தல் ஒரு உயிர் காப்பாற்றப்படும்.
பாம்பே ஒ பாசிடிவ் ரத்த வகை கொண்டவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி அவரது உறவினர் எண்கள் +919894099619, 88073 87336