July 25, 2016
தண்டோரா குழு
அர்ஜென்டினாவில் பொது இடத்தில் பால் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தாய்மார்கள் ஒன்றுகூடி பொது இடத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.
கொன்ஸ்டன்ஸா சாண்டோஸ், கடந்த வாரம் தனது 9மாத குழந்தைக்கு பொது இடத்தில் பால் கொடுக்கையில், போலீசார் விரட்டியடித்துள்ளனர். இதையெடுத்து கொன்ஸ்டன்ஸா சாண்டோஸ்க்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான தாய்மார்கள் ஒன்று கூடி போலீசுக்கு எதிராக பொது இடத்தில் பால் கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் கொடுப்பது விவாதத்திற்கானல்ல, 'எனது மார்பகம், எனது உரிமைகள்; உங்களுடைய கருத்து எனக்குத் தேவையில்லை' என சுமார் 500 மேற்பட்ட தாய்மார்கள் ஒன்று கூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தைபோல் தாய்மார்களின் உரிமையை நசுக்க நினைப்பது வருத்தமளிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
இதேப் போன்று மார் டெல் ப்ளாட்ட, டுகுமான் உள்ளிட்ட நகரிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
மேலும்,இந்தப் போராட்டம் போலீசுக்கு ஒரு பாடமாக இருக்கும், பொதுமக்களுக்குச் சேவை செய்தால் போதும், அவர்களுக்கு எதிராக வேலை செய்ய வேண்டாம் என அர்ஜென்டினா மனித உரிமை ஆர்வலர் அடோல்ஃபோ பெரிஸ் எஸ்கியுவேல் கருத்து தெரிவித்துள்ளார்.