• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமலுக்கு வந்தது பி.எஸ்.என்.எலின் 300 ஜிபி திட்டம்

September 9, 2016 தண்டோரா குழு

மத்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் 249 ரூபாய்க்கு மாதம் 300 ஜிபி இணையச் சேவையை அறிமுகப் படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது 'ரிலையன்ஸ் ஜியோ' சேவையை அறிமுகம் செய்ததிலிருந்து மற்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது.

வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மத்திய தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இது வரை அறிவித்த இண்டர்நெட் சேவைகளிலேயே மிகவும் குறைவான கட்டணத்தைக் கொண்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எக்ஸ்பிரியன்ஸ் அன்லிமிடட் பிராட்பேண்ட் 249 என்ற திட்டத்தை பி.எஸ்.என்.எல் இன்று அறிமுகம் செய்தது. இதன் படி, 1 ஜிபி இணையச் சேவையை 1 ரூபாய்க்கும் குறைவான செலவில் பயன்படுத்த முடியும்.

இணையப் பயன்பாடு 300 ஜிபியை தாண்டினாலும், ஒரு ஜிபி இணையத்துக்கான கட்டணம் 1 ரூபாய் எனக் குறைவாகவே கணக்கிடப்பட்டு, மொத்த பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்படும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் புதிதாக பிராட்பேண்ட் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிதாக பிராட்பேண்ட் சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் முதல் 6 மாதங்கள் 249 ரூபாய்க்கு சேவையை பெறலாம் என்றும் அந்தப் பின்னர் இச்சேவைக்கு 499 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க