• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லவ் ஜிகாத் என்ற பெயரில் இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை – ஒருவர் கைது

December 7, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தானில் லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாகக் கூறி இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமண்ட் (Rajsamand) மாவட்டத்தில் ஷம்பு (Shambu ) என்பவன், முகமது (Mohammad ) என்பவரை இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கச் செய்து லவ் ஜிஹாத்தில் ஈடுபட்டதாக கூறி கோடாரியால் சரமாரியாக வெட்டும் காட்சி வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது.அத்துடன் வெட்டப்பட்டதால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் முகமதை ஷம்பு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சியும் வெளியாகியுள்ளது.தீ வைத்து முடித்த பிறகு லவ் ஜிகாத்திற்கு முடிவு கட்டவே தான் கொலை செய்ததாக ஷம்பு பேசும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், உதய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஐ.ஜி. ஆனந்த் ஸ்ரீவத்சவ், உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ராஜ்சாமாந்த் மாவட்டத்தில் நேற்று நடைப்பெற்றதாகவும், அது வீடியோவாக எடுக்கப்பட்டு, வைரலாகப் பரவியதாகவும் ஆனந்த் ஸ்ரீவத்சவ் தெரிவித்துள்ளார்.

மேலும், வீடியோவை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதனிடையே, ராஜஸ்தானில் லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிருந்தா கரத் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க