• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்காட்லாந்தில் தொலைந்த கேமரா, ஸ்வீடனில் கிடைத்த அதிசயம்

July 22, 2016 தண்டோரா குழு

பிரிட்டனைச் சேர்ந்தவர் 37 வயது நிரம்பிய அடேல் டிவோன்ஷைர். ஸ்கூபா டைவரான இவர் 2013ம் ஆண்டு தண்ணீர் புகாத பிஜி கேமராவை கடலில் தொலைத்துவிட்டார்.

அவர் அந்தப் புகைப்பட கருவியைக் கொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட அரியப் படங்களை எடுத்து உள்ளார். தன்னுடைய கடின உழைப்பு வீணாகிவிட்டதை நினைத்து அடெலுக்கு மிகுந்த வருத்தமடைந்துள்ளார்.

ஆனால், அதிஷ்டவசமாக சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, 600 கிலோ மீட்டர் தொலைவில் அடெலின் கேமரா கண்டெடுக்கப்பட்டது. லார்ஸ் மோஸ்பெர்க், ஸ்வீடன் கடற்கரையில் ஒதுங்கியிருந்த கேமராவைக் கண்டெடுத்தார்.

சிவப்பு நிறத்தைப் பார்த்தவுடன் அருகில் சென்றதாகவும் அங்குச் சென்று பார்த்த போது அழகான பிளாஸ்டிக் கேமரா இருந்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும் தெரிவித்தார். பின்னர், அதை சோதித்துப் பார்த்த போது வேலை செய்ததையடுத்து, அந்தத் தண்ணீர் புகாத கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்துள்ளார்.

அதன் பின்னர் அது ஒரு ஆராய்ச்சியாளர் ஒருவரால் எடுக்கப்பட்டது எனப் புரிந்துகொண்டார். அதில் சுமார் 500 புகைப்படங்கள் வரை இருந்துள்ளது. ஜூலை 2013ல் கடைசியாகக் காட்சிகள் பதிவாகியிருந்தன.

மேலும், வீடியோவில் கேட்ட குரலை வைத்து, அவர் பிரிட்டின் நாட்டைச் சேர்ந்தவர் என்று முடிவு செய்துள்ளார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உரியவரிடம் சேர்ப்பது தான் சரியானது என்று நினைத்த அவர், பேஸ்புக்கில் சில படங்களை வெளியிட்டுள்ளார்.

சில மணி நேரத்தில் அந்தப் புகைப்படங்கள் குறித்தும் அந்த கேமரா குறித்தும் ஒருவர் கேட்டுள்ளார்.

இதையடுத்து அவர் அந்த நபரைக் குறுக்கு விசாரணை செய்ததில் அவர் அந்த கேமராவைத் தொலைத்த அடெல் தான் என உறுதி செய்து கொண்டு பின்னர் அவரிடமே கேமராவை ஒப்படைத்துள்ளார்.

தான் சேகரித்த அரியப் படங்கள் அனைத்தும் கிடைத்துவிட்டன என்றும் ஸ்காட்லாந்தில் தொலைந்து போன கேமரா ஸ்வீடனில் கிடைத்தது மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க