• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“நான் பூனை”. பூனை குணம் கொண்ட பெண்ணால் பரபரப்பு.

June 7, 2016 தண்டோரா குழு

உலகில் பல மனிதர்கள் பலவிதமான மன நிலையில் இருப்பது வழக்கம். மன அழுத்தம் அதிகரிக்கும் பொது அவர்களுக்குள் மாற்றங்கள் நடைபெற்று ஒருவர் மற்றவர் போல் நடந்துகொள்வதை மல்டிபிள் பர்சனாலிடி எனக் கூறுவது வழக்கம்.

ஆனால் ஒரு பெண் தன்னைப் பூனையின் இனம் என நினைத்துக்கொண்டு பல செயல்களைச் செய்து வருவது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நனோ என்ற 20 வயதுடைய பெண் நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் வசிக்கிறார். இவர் பிறந்தது முதல் அனைத்துக் குழந்தைகள் போலவும் இயல்பாகவே இருந்து வந்துள்ளார். ஆனால் இவர் தனது 16 ஆவது வயதில் தான் ஒரு பூனை என்று நினைக்கத் துவங்கியுள்ளார். பின்னர் அவரது பல்வேறு செயல்பாடுகள் பூனையைப் போலவே காணப்பட்டது கண்டு அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாகப் பூனைக்கு எவ்வாறு நாய்களைக் கண்டால் ஆகாதோ, அதே போல தனக்கும் நாய்கள் என்றால் பிடிக்காது எனவும் அவை அருகில் வந்தால் நான் தானாக பூனை போல சீற ஆரம்பித்து விடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தண்ணீரை வெறுப்பதாகவும், தான் தவறான இனத்தில் பிறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மனோதத்துவ மருத்துவர்கள், இது ஒரு வகையான மனோ வியாதிதான். இவர் சிறுவயதில் பெற்றோருடன் அதிகம் இருக்காமல் பூனைகளை அதிகளவு கொஞ்சி மகிழ்ந்திருக்கலாம். அதோடு அளவுக்கு அதிகமாக நெருக்கம் காட்டியிருந்தால் தானும் பூனை என நினைப்பு வரும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மனோபாவத்திலிருந்து அவர் விடுபட முடியும் எனவும், அதற்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நனோ தனது வாழ்க்கை முழுவதும் பூனையாகவே வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நீங்கள் எப்போதாவது எலியைப் பிடித்திருக்கிறீர்களா? என்று நனோவிடம் கேட்டபோது, நான் எலியைப் பிடிக்க முயற்சித்திருக்கிறேன், ஆனால் அதில் எனக்குத் தோல்வியே கிடைத்தது. பூனைகளைப் போன்றே நான்கு கால்களில் நடக்க விரும்புகிறேன்.

சமையலறை சின்க், ஜன்னல் போன்ற இடங்களில் உறங்கவும் விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க