September 24, 2016 தண்டோரா குழு
இளம் மஞ்சள் நிறத்தில் இஞ்சி பூனை இனத்தை சேர்ந்த போபோ என்னும் பூனை ஒன்று ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நியூயார்க் நகரில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட் கடையில் வேலை பார்த்து வருகிறது.
நியூயார்க் நகரில் சைனா டவுன் என்னும் இடத்திலுள்ள அந்த கடைக்கு, போபோ குட்டியாக இருந்த போது 2006 ஆம் ஆண்டு ஊழியர் ஒருவர் அதை அங்கு கொண்டு வந்தார். கடையில் உள்ள அனைவருக்கும் அது செல்லப்பிராணியாக இருந்தது. அக்கடைக்கு வரும் வழக்கறிஞர் ஒருவர், போபோவிற்கு உணவை கொண்டு வருவதையும் கால்நடை மருத்துவரிடம் அழைத்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும், 2014ம் ஆண்டு முதல் அக்கடையில் பணிபுரிய ஆரம்பித்த ஆனி என்பவரின் பராமரிப்பில் போபோ வளர தொடங்கியது. போபோவை குறித்து ஆனி பேசுகையில், ‘கடையின் நுழைவில் அருகில் உட்கார்ந்து வாடிக்கையாளர்களை வாழ்த்தும், போபோ மிகவும் அமைதியான பூனை மற்றவர்களுடன் நட்புடன் பழகும் குணம் உடையது., யாரும் கடையில் இருந்து பொருள்களை திருடாமல் இருக்க மிகுந்த கவனத்தோடு செயல்ப்படும். வாடிகையாளர்களோடு செல்பி எடுப்பது, வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்ள அவர்களுக்கு வழி காட்டும், வாடிக்கையாளர்களை மிகவும் நேசிக்கிகும். ஊழியர்களை விட நல்ல வேலையை போபோ செய்கிறது. இதை பார்பதற்காகவே வாடிக்கையாளர்கள் கடைக்கு அதிகம் வர தொடங்கிவிட்டனர்.
போபோவின் பல்வேறு நடவடிக்கைகள் ஆச்சரியத்தை அளிக்கிறது அதனை இன்ச்டாக்ராம் என்னும் சமுக தலத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக ஆனி தெரிவித்தார்.