January 8, 2018 தண்டோரா குழு
கோவை மாநகரப் பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.
கோவை அவினாசி சாலையில்,சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் சாலைகளில் சாலை விதிமுறைகளை பின்பற்றும் பதாகைகளை ஏந்தி நின்றனர்.இதில் சாலை விதிமுறைகளை கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் சாக்குலேட்டுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் துறை ஆணையாளர்
“கோவை மாநகரத்தில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கோவையில்,குறிப்பாக பந்தய சாலை, கொடீசியா உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும்.
விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறினார்.அதிக ஒலி எழுப்பும் வகையில் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் கோவை மாநகரத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களை கண்காணிக்க,ஏழு இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் மாநகரத்திற்குள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படும்” எனக் கூறினார்.