September 20, 2016
தண்டோரா குழு
காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் , நாளை முதல் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடவும் கர்நாடகவுக்கு உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.பி புட்டராஜூ தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், நாளை மக்களவைத் தலைவரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.