October 14, 2016
தண்டோரா குழு
கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் சந்தேகிக்கும் நபர்களின் புகைப்படத்தை சி.பி.சி.ஐ.டி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து துடியலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 6 தனி படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணையானது கடந்த 28 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. விசாரணையை துரித படுத்தியுள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார் கொலை நடந்த அன்று காந்தி புரத்திலிருந்து துடியலூர் பகுதி வரை சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சந்தேகிக்கும் நபர்களின் புகைப்படத்தை அன்மையில் வெளியிட்டது. அதைதொடர்ந்து நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறிய அடையாளங்களை வைத்து வரையப்பட்ட புகைபடத்தை சி.பி. சி.ஐ.டி போலீஸார் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் உள்ள நபர் உடனடியாக கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிறப்பு புலனாய்வு காவல் அலுவலகத்தை அனுகுமாறு தெரிவித்துள்ளனர். மேலும்,பொது மக்களும் மேற்கண்ட நபரை குறித்து தகவல் தெரிந்தால் அதனை CBCID சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்லின் 94981 04441 என்ற மொபைல் எண்ணிலும், [email protected] என்ற இ மெயில் முகவரியிலும் தெரியப்படுத்தலாம் என சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளார்.