November 1, 2016 தண்டோரா குழு
பிரதமர் நரேந்திர மோடியின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு முதல் கட்டமாக ரூ.1,093 நிதியை மத்திய நிதியமைச்சகம் வழங்கியுள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்கன் வாணி ஜம்மு காஷ்மீரில் காவல் துறையினரால் கடந்த ஜூலை மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
பொதுமக்கள், வணிகர்கள், பள்ளிக் குழந்தைகள் என யாரும் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர இராணுவம் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நடந்த கலவரங்கள் மற்றும் பல காரணங்களால் சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் விவசாய நிலங்களைச் சீரமைக்க மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.1,093 கோடி ரூபாய் நிதி வழங்கியது.
பிரதமர் மோடியின் மறுசீரமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சேதமடைந்த பொதுச் சொத்துகளான மருத்துவமனைகள், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றைச் சீரமைக்கவும்,மாநிலத்தில் விவசாயத்தைச் சீரான நிலைக்குக் கொண்டு வரவும் ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக ரூ. 1,093 மத்திய நிதியமைச்சகம் வழங்கியுள்ளது.பிரதமரின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலத்தில் விவசாயத்தை மேம்படுத்த ரூ.500 கோடி தனியாக வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தொடர்ந்து நிலவும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்கள், தொழில் முனைவோர்களுக்கும் உதவும் வகையில் பிரதமரின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.