• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய பருப்பு வகை அறிமுகப்படுத்தப்படும் – அருண் ஜெட்லி

November 1, 2016 தண்டோரா குழு

பருப்பு விவசாயத்தில் அதிக மகசூல் பெற அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய பருப்பு வகை (பூசா-16) அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கல்வி நிலையம் சார்பில் புதிய ரக பருப்பு வகைகள் கண்காட்சி தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பருப்பு வகைகளை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் அருண் ஜெட்லி நிரூபர்களிடம் பேசியதாவது:

மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பருப்பு வகைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. நமது உணவில் இடம்பெறும் முக்கிய புரதச் சத்தான பருப்பு வகைகள். அவற்றின் உற்பத்தி, பயன்பாடு, இறக்குமதியை அதிகம் செய்வது இந்தியாதான்.

வர்த்தக ரீதியிலான விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காகவும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய பருப்பு வகை (பூசா-16) அறிமுகப்படுத்தப்படும்.

இந்த பருப்பு வகையைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். அடுத்த மூன்று ஆண்டுகளில் நம் நாடு, பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை எட்டி விடும் என பேசினார்.

மேலும் படிக்க