October 3, 2016
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழகம், கர்நாடக தாக்கல் செய்து வழக்கை நடத்தி வந்தது . இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது.
இந்த குழுவில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் தெரிவிக்க உத்தரவிட்டது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் தங்களது தரப்பு நிபுணர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வாரியத்தை அமைக்க உத்தரவிட முடியாது. வாரியம் என்பது பரிந்துரை மட்டுமே. காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது அமைக்கும் சாத்தியமில்லை. வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வரஉள்ளது இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை நாளை பிற்பகல் 2 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.