• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி

December 3, 2016 தண்டோரா குழு

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், அது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான நடா புயல் வலுவிழந்து கரையைக் கடந்து சென்றதால் தமிழகத்தில் எதிர்பார்த்த மழை பொழியவில்லை. இருப்பினும், அங்காங்கே மழை இருந்தது. வானம் வறண்டு காணப்படுகிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பொய்துள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு அதிகம் இருக்கும் என வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே போல் வானிலை மாற்றம் காரணமாக வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாயினர். தில்லியில் உறைபனி காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தில்லியில் பனிமூட்டம் காலை 10 மணி வரை நீடிக்கிறது. இது பொதுமக்களைப் பாதிக்கிறது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் உறைபனி சூழ்ந்ததால் 140-க்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு சனிக்கிழமை தாமதமானது.

இதே போல் தில்லியிலிருந்து புறப்படவேண்டிய 13 ரயில்கள் இரவு ரத்து செய்யப்பட்டன. வாரணாசி, கான்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடும் பனி நீடிப்பதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க