October 11, 2016 தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்க்ஷி தோனி மீது டெல்லி போலீசார் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரிஷ்தி எம்எஸ்டி அல்மோட் (Rhiti MSD Almode Pvt. Ltd) எனும் தனியார் நிறுவனத்தை சாக்க்ஷி தோனி, அருண் பாண்டே, சுபாவதி பாண்டே மற்றும் பிரதிமா பாண்டே ஆகியோர் துவங்கியுள்ளனர்.
இவர்களுடன், 39 சதவிகிதம் முதலீடுடன் ஸ்போர்ட்ஸ் பிட் வேர்ல்ட்( sports fit world)எனும் தனியார் நிறுவனம் பங்குதாரராக சேர்த்துள்ளது. இதற்கிடையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக ரிஷ்தி எம்எஸ்டி அல்மோட் நிறுவனம் முழு முதலீடையும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்போர்ட்ஸ் பிட் வேர்ல்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது.
இந்நிலையில்,முதலீடு பரிமாற்றத்தின் போது இருதரப்பினருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரிஷ்தி எம்எஸ்டி அல்மோட் நிறுவனம், இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் அரோராவுக்கு ரூ.11 கோடி கொடுக்கப்பட வேண்டும்.ஆனால், அரோரா தரப்பில் ரூ.2.25 கோடி மட்டுமே பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில் அந்நிறுவனம் சார்பில் குருகிராம் காவல் நிலையத்தில் ரிஷ்தி எம்எஸ்டி அல்மோட் நிறுவனத்தின் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.எனினும்,அந்நிறுவனத்தின் பங்குதாரரான அருண் பாண்டேவோ பாதிக்கும் மேற்பட்ட தொகை கொடுத்து விட்டதாக கூறிவருகிறார்.
மேலும், தோனியின் மனைவியான சாக்க்ஷி இந்நிறுவனத்தில் பங்கு தாராராக இருந்து விலகி ஒரு வருடம் ஆன நிலையில் அவருடைய பெயரும் இந்த மோசடி வழக்கில் ஏன் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.