November 29, 2017 தண்டோரா குழு
சென்னையில் செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்க சென்ற பிக் பாஸ் ஜூலிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகச் செவிலியர்களின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.இதை ஏற்க செவிலியர்கள் மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,”பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரது கோபத்திற்கு ஆளான ஜூலி தானும் ஓர் செவிலியர் என்ற விதத்தில், செவிலியர் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
இதனிடையே, இன்று காலைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக டி.எம்.எஸ் வளாகத்துக்கு வந்தார்.அவரைக் காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இது குறித்து அவர் கூறுகையில், “சாதாரணமாக கூலி வேலை செய்பவர்களுக்கு கூட தினமும் 500 ரூபாய் கிடைக்கிறது.ஆனால் ஒப்பந்த அடிப்படையில் இங்கு பணியாற்றுபவர்களுக்கு வெறும் 250 ரூபாய் தான் கிடைக்கிறது. ஒரு சராசரியான மனிதனுக்கு இந்த ஊதியம் மிகவும் குறைவு” என்று கூறியுள்ளார்.