December 18, 2017 தண்டோரா குழு
சத்தீஸ்கரில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில், 7௦ ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முதல் முதலாக மின்சாரம் கிடைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் ஜோகர்ப்பத்தா கிராமம் என்னும் பழங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 7௦ ஆகியும், அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லாததால்,அந்த கிராமம் இருளில் மூழ்கியிருந்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் ராமன் சிங், மின்சாரம் இல்லாத சுமார் 7௦ கிராமங்களுக்கு மின்சார இணைப்புகளை வழங்கியுள்ளார். அவ்வகையில், ஜோகர்ப்பத்தா கிராமத்திற்கு நேற்று
(டிச 17) மின்சார இணைப்பு கிடைத்துள்ளது.
“எங்கள் கிராமத்திற்கு மின்சார இணைப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், எங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல், எங்கள் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்ற காண முடியும்” என்று அந்த கிராமத்தின் தலைவர் தெரிவித்தார்.