October 18, 2016
தண்டோரா குழு
9-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் ஜியாமன் நகரில் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அம்மாநாடு நடைபெறும் இடங்கள் இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் விருப்பப்படி, சுழற்சி முறையில் தேர்வு செய்யப் படுகின்றன. அவ்வகையில், கடந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷியாவில் உள்ள உஃபா நகரில் நடைபெற்றது. இந்த ஆண்டின் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள பெனாலிம் நகரில் வெற்றிகரமாக நடத்து முடிந்தது.
இந்த மாநாட்டை அடுத்த ஆண்டு நடத்த வேண்டியது சீனா ஆகும். இந்நிலையில், கோவாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீன அதிபர் ஜின்பிங், “பிரிக்ஸ் அமைப்பின் 9-வது உச்சி மாநாடு சீனாவில் உள்ள கடலோர நகரமான ஜியாமேன் நகரில் நடைபெறும் என்றும் இம்மாநாடு பிரிக்ஸ் அமைப்புக்கான ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்நகரத்தின் வரலாற்று பெயர் அமோய். இது பிஜியன் மாகாணத்தில் புகழ்பெற்ற கடலோர உல்லாச நகரமாகும். இயற்கை எழில் கொஞ்சும் ஜியாமேன் நகரம் உலகின் மிகவும் அழகான நகரமாக கடந்த 2011ல் தேர்வாகியிருந்தது.
/-3088265/