January 25, 2018 தண்டோரா குழு
உலகிலேயே முதல்முறையாக குரங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.
தமிழலில் எஸ்.ஜெ.சூர்யா படமான வியாபாரி படத்தில் வருவது போன்று ஓர் உயிரினத்தின் உயிரணுக்களிலிருந்து படியெடுத்து, அதே போன்ற உயிரினத்தை உருவாக்கும் முறை குளோனிங் ஆகும்.நவீன அறிவியலின் அசுரவளர்ச்சிக்கு உதாரணமான இந்த முறையின் மூலம் 1996-ஆம் ஆண்டு செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், இதே முறையைப் பின்பற்றி, சீனாவில் உள்ள சைனீஸ் அகாடமி ஆப் சைன்ஸ் (Chinese Academy of Sciences) அமைப்பின் விஞ்ஞானிகள், தற்போது உலகிலேயே முதல்முறையாக மக்காக் (macaque) வகை குரங்குகளை உருவாக்கியுள்ளனர்.இந்த குளோனிங் குரங்குக் குட்டிகளுக்கு ஜாங் ஜாங், ஹுவா ஹுவா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து, குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு குரங்குகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த சாதனையை படைத்துள்ள சீன விஞ்ஞானிகள் மனிதர்களையும் குளோனிங் மூலம் உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.