October 2, 2018
தண்டோரா குழு
காதி கிராமோதிய பவன்,பி.எஸ்.ஜி கல்லூரி இணைந்து கோவை ப்ரூக் பீல்ஸ் வணிக வளாகத்தில்,காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காதி தினம் கொண்டாடப்பட்டது.காதி பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் காதி பொருட்களால் வடிவமைத்த பல்வேறு அலங்கார பொருட்கள் கண்காட்சியாக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தனர்.ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் காதி பொருட்களை வாங்கி சென்றனர்.தங்களது கலாச்சாரத்தை மறக்காமல் நினைவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளனர்.
காதி பொருட்களை வாங்குவதால் பல குடும்பங்களுக்கு பெருளாதார உதவி கிடக்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.இந்த தினத்தில் வணிக வளாகத்தில் காதி ஆடை அணிந்து வந்தவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.