November 28, 2017
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்திற்கு நியூசிலாந்துது மேசி பல்கலைகழக மாணவர்கள் இன்று(நவ 28) வருகை புரிந்தனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை,வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கம்,அங்கக வேளாண்மை,உயிர் ஆற்றல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வக மையம் போன்றவற்றை நியூசிலாந்துது மேசி பல்கலைகழக மாணவர்கள் பார்வையிட்டு,அந்தந்த மையங்களில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து கலந்துரையாடினார்.
மேலும்,வேளாண் பல்கலையில் உள்ள ஆய்வக வசதிகள் படிப்புகள் உழவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் வேளாண் பல்கலையில் உள்ளதொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டறிந்தனர்.