October 6, 2017 தண்டோரா குழு
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்பல்கலைகழகநூலகத்தில் மாணவர்களுக்காக ஒய்-பை
(wi-fi)இணையதளவசதி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்பல்கலை கழக நூலகத்தில் ஒய்-பை இணையதளவசதி இந்திய வேளாண் அறிவியல் கழகத்தின் நிதியுதவியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூலகத்திலிருந்து சுமார்50மீட்டர் சுற்றளவுக்கு இவ்வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதி மூலம் மாணவர்கள் அவர்களது மடிக்கணினி அல்லது கைப்பேசியின் உதவியுடன் இணையதளவசதி பெறலாம்.
இதன்மூலம் மாணவர்கள் மின்புத்தகங்கள்,மின்னனுஆய்விதழ்கள்,மற்றும் பிறமின்தரவுதளங்களையு ம்தரவிறக்கம் செய்து குறிப்பெடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். “இந்தவசதியினை24 மணி நேரமும் பயன்படுத்த முடியும் என்பதால் மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை நூலக மின்வளங்களை(e magazine, journals, etc.,)பதிவறக்கம் செய்யவும் படிக்கவும் உபயோகிக்கலாம்,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.