November 30, 2017 தண்டோரா குழு
கோவையில் நடைபெற்று வரும் விமானங்கள் கண்காட்சியில் ஏராளமான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் விமானவியல் கல்லூரியில் விமானங்கள் கண்காட்சி இன்று(நவ 30) துவங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியில்,விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பார்வையாளர்களின் காண்பதற்காக வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,
“பொதுமக்களிடம் விமானங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து பொதுமக்களும் விமான நிலையத்தை சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட முடியாத சூழல் உள்ளது.இந்நிலையில்,இந்த கண்காட்சியில் ஐந்தாயிரம் சதுர அடி பரப்பளவில் மாதிரி விமான நிலையம் அமைக்கப்பட்டு அதன் செயல்பாடுகளை விளக்கும் விதமாக பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களும் விமானத்தில் பயணிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.இக்கண்காட்சியை,ஏராளமான பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்”. என்று கூறினர்.