December 6, 2017
கோவை பீளமேடு மற்றும் வடகோயம்புத்தூர் இடையே உள்ள ஆவாரம்பாளையம் லெவல் கிராசிங் நாளை முதல்(டிச 7) மூடப்படுகிறது.
ரயில் தட விபத்துக்களை குறைக்க இந்திய ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக,கோயம்புத்தூர் பீளமேடு மற்றும் வடகோயம்புத்தூர் இடையே உள்ள ஆவாரம்பாளையம் லெவல் கிராசிங் மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட உள்ளது.
இந்நிலையில்,நாளை முதல்(டிச 7)முதல் பீளமேடு மற்றும் வடகோயம்புத்தூர் இடையே உள்ள ஆவாரம்பாளையம் லெவல் கிராசிங் மூடப்பட்டு சத்தி ரோடு மற்றும் புது சித்தாப்பூர் ரோடு வழியாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்காக இந்திய ரயில்வே நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை இணைந்து 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.மேலும்,மேம்பாலப் பணிகள் 30.09.2018 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.