August 1, 2018 தண்டோரா குழு
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை,சூலூர் பகுதியில் உள்ள கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை மருத்துவமனை துணை தலைவர் தவமணி பழனிசாமி துவக்கி வைத்து பேசினார்.இதில் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமான உணவுடன் நல்ல மனநிலையை உருவாக்கி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும்,இக்கருத்தரங்கில் பேசிய மகப்பேறு மருத்துவர்கள்,தாய்பால் கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகளையும்,குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தையும் எடுத்து கூறினார்.இக்கருத்தரங்கில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டனர்.