January 25, 2018 தண்டோரா குழு
கோவையில் பத்மாவத் என்ற பெயரில் வெளியான திரைப்படத்தை தடைசெய்யக்கோரி ராஷ்ட்ரீய ராஜ்புட் கர்ணி சேனா அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவத் படம் வெளியாவதற்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு படத்தின் பெயர் மாற்றப்பட்டு , சில காட்சிகள் வெட்டப்பட்டு, பத்மாவத் என்ற தலைப்பில் நேற்று இந்தியா முழுவதும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ராஜபுத்திர அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,இயக்குநர் பன்சாலியை சிரச்சேதம் செய்வோம், நடிகை தீபிகா படுகோனின் மூக்கை அறுப்போம் என கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்திரைப்படத்தை திரையிட தடை செய்யக்கோரி 50 க்கும் மேற்பட்ட ராஷ்டிரிய ராஜ்புட் கர்ணி சேனா அமைப்பை சார்ந்தவர்கள் கோவை காந்தி பார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பத்மாவத் திரைப்படைத்தை தடை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்