September 21, 2016
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யபட்டுள்ள விவரங்களை பொதுமக்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யும் திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் இணையதளம் மூலம் பொதுமக்களின் குறைகள், மாநகராட்சியின் செய்தி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வரிகள் சம்மந்தபட்ட விவரங்ககளை இணையதளம் மூலம் அறிமுகம் செய்து கொள்ளும் வசதி ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், மேற்கண்ட விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் விதமாக புதிதாக மாநகராட்சி சார்பில் மொபைல் ஆப் இன்று அறிமுகபடுத்தபட்டது. இந்த Appஐ பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் தங்கள் மொபைலில் தங்களுக்கு தேவையான தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இத்திட்டத்தை நகராட்சி, நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் செயலாக்கதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.
“CMCC“ எனப்படும் இந்த மொபைல் Appன் அண்ட்ராய்டு செயல்பாடு வாரவார இறுதியிலும், IOS செயல்பாடு மாத இறுதியிலும் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.