December 6, 2017 தண்டோரா குழு
கோவையில் ராமருக்கு பிரமாண்ட ஆலயம் அமைத்திட பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றக்கோரி இந்து முன்னணி சார்பாக காவிக்கொடி ஆர்ப்பாட்டம் இன்று(டிச 6) நடைப்பெற்றது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அந்த இடத்தில் ஸ்ரீ ராமருக்கு பிரமாண்டமாக ஆலையம் அமைத்திட வலியுறுத்தி இந்து முன்னணியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட இந்து முன்னணியின் சார்பாக காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே 1000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இந்து முன்னணி கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா கூறுகையில்,
“அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவும், காஷ்மீர் மற்றும் அயோத்தியிலுள்ள முஸ்லீம்கள் ராமர் ஆலயம் அமைக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை . ஆனால் தமிழகத்தில் தான் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்”.இவ்வாறு கூறினார்.