January 11, 2018 தண்டோரா குழு
கோவையில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆண்டு தோறும் பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம்.அந்த வகையில் 11 ஆம் ஆண்டு பொங்கல் விழா குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடப்பெற்றது.
கோவை கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்கம் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செயலாளர் கலையரசன், சிறப்பு விருந்தினராக முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் ஆகியார் கலந்து கொண்டனர்.இவ்விழாவில் மண் பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபட்டனர்.
இதையடுத்து, கோர்ட் வளாக நுழைவு வாயில்களில் வாழை மற்றும் தென்னை ஓலைகளால் அலங்கரித்து இருந்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு சர்க்கரை பொங்கல், கரும்பு வழங்கப்பட்டன. பொங்கல் பொங்கியபோது வழக்கறிஞர்கள், ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி பொங்க முழங்கியும்,குலவையிட்டும் மகிழ்ந்தனர்.இந்த விழாவில் காளை மாடு,மற்றும் சேவல்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.