December 5, 2017
கோவையில் ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையில் ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரியிலிருந்து கோவை வந்த தனியார் ஆம்னி பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலையடுத்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆவாரம்பாளையம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, முறையான ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 15 பார்சல் பெட்டிகளில் இருந்த தடை செய்யப்பட்ட சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், இரண்டாம் முறையாக புகையிலை பொருட்களை கொண்டு வந்த தனியார் ஆம்னி பேருந்தையும் பறிமுதல் செய்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பியுள்ளதாகவும், ஆய்வின் அடிப்படையில் வழக்கு பதிவு உள்ளிட்ட அடுத்தக்கட்ட சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்பு துறையின் நியமன் அலுவலர் விஜயா லலிதாம்பிகை தெரிவித்தார்.
மேலும், கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணான 9600873681
தொடர்பு கொள்ளலாம் என்றும்,பேருந்தில் பார்சல் குறித்து முறையான தகவல் இல்லாமல் இருந்தால் நகரத்தில் கொண்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.