December 6, 2017
கோவையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி,ரயில் நிலைய முற்றுகையில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியனர் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று இந்தியாவின் கறுப்பு தினமாக முஸ்லீம் அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர்.இந்நிலையில், இவ்வழக்கில் நியாமன தீர்ப்பை நீதித்துறை வழங்க வேண்டும் என்று வலியியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சியினை சேர்ந்தவர்கள் கோவை ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத் கூறுகையில்,
“பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 25 ஆண்டுகளாக நீதி கிடைக்க மக்கள் காத்திருக்கின்றனர். இவ்வழக்கில் அயோத்தியில் உள்ள அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை ஆய்வு செய்து நியாயமான தீர்ப்பை தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும்.மேலும்,வழக்கு நிலுவையில் உள்ள போதே பி.ஜே.பி.யின் நட்பு அமைப்புகள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என பரப்புரை செய்து வருகின்றனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.