• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே நகர் தேர்தலில் சீர் திருத்தங்கள் கொண்டு வந்தால் மட்டுமே தேர்தல் நியாயமாக நடைபெறும் – நல்லசாமி

December 7, 2017 தண்டோரா குழு

ஆர்.கே நகர் தேர்தலில் சீர் திருத்தங்கள் கொண்டு வந்தால் மட்டுமே தேர்தல் நியாயமாக நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

“ஆர்.கே நகர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் சில சீர் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.ஆர்.கே.நகர் தொகுதியில் தங்கள் இயக்கத்தின் சார்பாக கதிரேசன் என்பவர் போட்டியிடவுள்ளார்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்  நியாயமாக நடக்க வேண்டும் என்றும்,மீண்டும் தேர்தலை நிறுத்தினால் அது தமிழகத்திற்கு மிகுந்த அவமானம்.

ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் o.2% சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றால் அவரால் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்ட செலவை அந்த வேட்பாளரே செலுத்த வேண்டும் என்ற புதிய சீர் திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.

மேலும்,வேட்புமனு தாக்கல் செய்து பின்னர் அதனை வாபஸ் பெற்றால் முக்கிய கட்சிகளிடம்  இருந்து  பணம் பெறலாம் என்பதற்காகவே, ஆர்.கே நகரில் சுயேட்சை வேட்பாளர்கள் தற்போது அதிகரித்துள்ளனர்.இதேபோல் நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் நேரத்தில் எச்சரிக்கையாக இருந்திருந்தால்,அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்காது”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க