November 20, 2017
கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர். பாலசுப்பிரமணியம். அவர் சித்தாபுதூரில் பத்துக்கு பத்து அறையில் பொதுமக்களுக்கு 20 ரூபாயில் மருத்துவம் பார்த்து வந்தார். ஆரம்பத்தில் இரண்டு ரூபாய் மட்டுமே வாங்கியவர் கடைசியாக நோயாளிகளிடம் வாங்கிய மருத்துவ கட்டணம் 20 ரூபாய்.
20 ரூபாய் மருத்துவர் என்ற அழைக்கப்பட்டவர் பலத்த எதிர்ப்புக்கிடையே , தன்னை நம்பி வரும் மக்களுக்கு மருந்து உட்பட இருபது ரூபாய் மட்டுமே வைத்தியம் பார்த்து வந்துள்ளார். தன்னிடம் மருந்து இல்லை என்றால் குறைவான விலையிலுள்ள மருந்துகளை மட்டுமே வாங்கியுள்ளார். கஷ்டப்படுகிறவர்களிடம் அந்த இருபது ரூபாய் கூட வாங்கியது கிடையாது.
ஒருமுறை கட்டணம் வாங்கி விட்டால் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து வந்தாலும் கட்டணம் கேட்க மாட்டார்.நம்பி வருபவர்கள் ஏமாந்து போகக்கூடாது என்பதற்காக எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், விடுப்பு எடுக்காமல் நோயாளிகளின் மீது அக்கறை காட்டியவர்.
கடந்தாண்டு இதே நாளில் (20.11.2016) நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
மக்கள் மருத்துவர் மக்களின் மனதில் நீங்க இடம்பெற்றிருக்கிறார் என்பதை மெய்பிக்கும் வகையில் அவர் இறந்து ஒராண்டுக்கு பின்பும் மருத்துவம் பார்த்த வந்த அறையின் முன்பு உள்ள சாலையில் அவருக்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.