• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சுதா டெஸ்ட்டியூப் பேபி மையத்தில் அதிநவீன இம்சி(IMSI) சிகிச்சை முறை அறிமுகம்

December 1, 2017 தண்டோரா குழு

கோவையில் சுதா டெஸ்ட்டியூப் பேபி மையம் மருத்துவமனையில் இம்ஸி சிகிச்சை முறையில் குழந்தை பிறந்து சுதா டெஸ்ட்டியூப் பேபி மையம் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

கோவை காந்திபுரம் பாரதியார் ரோட்டில் செயல்படும் சுதா டெஸ்ட்டியூப் பேபி மையத்தில் குழந்தை பிறப்புக்கான அதிநவீன சிகிச்சை முறையில் ஒன்றான இம்ஸி முறையில் முதல் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் தனபாக்கியம் கூறுகையில்,

“சுதா டெஸ்ட்டியூப் பேபி மையம் கடந்த 28 ஆண்டுகளாக ஈரோட்டிலும், 7 ஆண்டுகளாக கோவையில் செயல்பட்டு வருகிறது. இதில் ஈரோடு மருத்துவமனையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெஸ்ட்டியூப் குழந்தைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்.

கோவையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைக் குழாய் குழந்தைகளை உருவாக்கியுள்ளோம். இதன் தொடர்ச்சியாக உலகப் புகழ் பெற்ற இம்ஸி எனப்படும் அதிநவீன டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை முறை சுதா டெஸ்ட்டியூப் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த இம்ஸி சிகிச்சை முறையில் இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன், கென்யா, நைஜீரியா, கனடா போன்ற பல நாடுகளில் இருந்து குழந்தையில்லா பல தம்பதிகள்,இங்கு வந்து சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில்,கடந்த 2016ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த நிரோசா, பிரேமதிலகே தம்பதியினருக்கு சுதா டெஸ்ட்டியூப் பேபி மையத்தில்,அதிநவீன சிகிச்சையான இம்ஸி முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்த தம்பதியினர் இலங்கையில் உள்ள டெஸ்ட்டியூப் பேபி மையத்தில் IVF முறையில் சிகிச்சை பெற்று தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ஸி சிகிச்சை முறையில்,ஆண் விந்துவை 6500 மடங்கு உருப்பெருக்கி காட்டப்பட்டு விந்துவில் உள்ள குறைகளை நீக்கி வீரியமான மற்றும் தரமான விந்துவை பெண்ணின் கருமுட்டையில் உட்செலுத்தி குழந்தையை உருவாக்குவதே இம்ஸி சிகிச்சை முறையாகும்.

இலங்கை தம்பதியினருக்கு 09.03.2017 ம் அன்று இம்ஸி முறையில் கரு உருவாக்கப்பட்டு அதனை உறுதி செய்து இரண்டு மாதத்தில் அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுதா டெஸ்ட்டியூப் பேபி மையத்தில் முதல் முறையாக இம்ஸி அதிநவீன சிகிச்சை முறையில் உருவாக்கப்பட்ட கரு வளர்ந்து 21.11.2017ல் முதல் இம்ஸி ஆண் குழந்தை இலங்கையில் பிறந்தது. சுதா டெஸ்ட்டியூப் பேபி மையத்தில் அதிநவீன அனைத்து சிகிச்சை முறையில் குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை உருவாக்குவது மையத்திற்கு மேலும் ஒரு மைல்கல்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க