December 7, 2017
கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டெருமை தாக்கி கிருஷ்ணசாமி என்பவர்
படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு தேயிலை தோட்ட கழக எஸ்டேட்டில் காட்டெருமை தாக்கியதில்
கிருஷ்ணசாமி என்பவர் படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்குகள் தொடர்ந்து தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து தொழிலாளர்களை தாக்கி வருகிறது.இந்நிலையில் இன்று(டிச 7) காலை சின்னக்கல்லாறு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக எஸ்டேட்டுக்குள் ஒற்றை காட்டெருமை புகுந்தது. இதனையடுத்து பணியில் இருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து பதறியடித்து ஓடினர்.
அப்போது அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கிருஸ்ணசாமி என்பவரை காட்டுடெருமை தாக்கியது, இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதனைதொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேயிலை தோட்டத்திற்குள் தொடர்ந்து காட்டுடெருமை புகுந்து வருவது குறித்து பல முறை வனத்துறையிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.