December 19, 2017 தண்டோரா குழு
கோவை அருகே காட்டுயானையை அச்சுறுத்தும் செங்கல் சூளை ஊழியர்கள் நேரடி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவை மாவட்டம் தடாகம், கனுவாய்,மாங்கரை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது.இந்த செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க பனைமரம் பயன்படுத்தப்படுகிறது.இந்த பனைமரத்தில் உள்ள கூழை சாப்பிடவும் தண்ணீர் அருந்தவும், நாள் தோறும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் அவ்வாறு பனைமரத்தை சாப்பிட வந்த ஒற்றையானையை செங்கல் சூளை ஊழியர் ஒருவர் தொந்தரவு செய்வதும்,பின்னர் அந்த யானையை சீண்டுவதும் யானை அந்த ஊழியரை துரத்தி வருவதையும் அருகில் உள்ள நபர் ஒருவர் தனது செல்பொன் மூலம் பதிவு செய்துள்ளார்.
மேலும்,கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே போன்று காட்டுயானைகளை,இளைஞர்கள் சிலர் தொந்தரவு செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த காட்சிகள் வேதனையை தரும் வகையில் உள்ளது.உடனடியாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.