December 1, 2016
தண்டோரா குழு
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான நடா புயல் வலுவிழந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசியதாவது;
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வியாழக்கிழமை காலை தொடங்கி கனமழை நீடிக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 670 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த நடா புயல், மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடற்கரையை நோக்கி வந்துகொண்டுள்ளது.
இந்தப் புயல் தற்போது வலுவிழக்கத் தொடங்கியுள்ளது. நடா புயல் வெள்ளிக்கிழமை காலை புதுச்சேரி – வேதாரண்யம் இடையே கடலூர் அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.