January 18, 2018 தண்டோரா குழு
ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும்பணி டிச.27ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஓக்கி புயலால் கடலில் மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ஆம் தேதியுடன் முடித்துக்கொண்டுவிட்டதாகவும்கடுமையான முயற்சிகளை மேற்கொண்டும் காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லைஎன்றும் கூறினார். மேலும், மீனவர்களை தேடுதல் பணியை மீண்டும் தொடங்கக் கோரி தமிழக முதலமைச்சரிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.