• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் – லெப்டினல் ஜெனரல் மார்வா

October 14, 2016 தண்டோரா குழு

பேரிடர் காலங்களில் பாதுகாப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினல் ஜெனரல் மார்வா அறிவுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் முன்னிலையில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மை ஆணைய உறுப்பினர் மார்வோ மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் மார்வோ,

பேரிடர் காலங்களில் மாவட்டத்தில் எவ்வித பாதிப்புகள் வராத வண்ணம் முழுமையாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை முன் கூட்டியே தெரிந்து தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்திடும் அளவிற்கு வாய்க்கால் பகுதிகளை சீர் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீர் ஓடைப்பகுதிகள், குளங்கள் ஆகியவற்றில் நீர்நிலை தன்மை குறித்து கண்காணிக்க வேண்டும். அதுமட்டுமின்றி தாழ்வான பகுதிகளில் திடீர் என தண்ணீர் தேங்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் படகுகள் போன்ற பாதுகாப்பான உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், தீ விபத்து, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகிய காலங்களில் தங்களை தாங்களே பாதுகாப்பதுடன் மட்டுமின்றி தம்மை சார்ந்துள்ளவரையும் பாதுகாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தாலுகா அளவில் அனைத்துத்துறை அலுவலர்களையும் கொண்டு பேரிடர் ஆய்வுக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் எனக்கூறினார்.

அதைபோல் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு தயார் நிலையில் வைத்துக்கொள்வதுடன் பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவை ஒன்றிணைந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது மட்டுமின்றி அனைத்துத்துறை அலுவலர்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என ஜெனரல் மார்வா கூறினார்.

மேலும் படிக்க