October 22, 2016
தண்டோரா குழு
தேசிய அளவிலான ரோமிங் கட்டணங்கள் தீபாவளி முதல் ரத்து செய்யப்படும் என்று வோடஃபோன் நிறுவனம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பிறகு தொலைதொடர்பு துறையில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களர்களைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் புதிதாக இணையும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 259க்கு “10 ஜிபி” என்ற அறிவிப்பை வெளிட்டது. இதையடுத்து, இந்தச் சலுகை அறிவிப்பில் வோடஃபோன் நிறுவனம் தற்போது இணைந்துள்ளது.
வரும் தீபாவளி முதல் தேசிய அளவில் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகளுக்குக் கட்டணம் கிடையாது என வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
‘வோடஃபோனில் தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வசூலிக்கப்படமாட்டது. இந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், இன்கமிங் அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது. மேலும், வாடிக்கையாளர் அழைக்கும் அவைப்புகளுக்கும் (அவுட்கோயிங் கால்கள்) இனி மிகக்குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படும்’ என வோடஃபோன் நிறுவன வர்த்தகப் பிரிவு இயக்குநர் சந்தீப் கட்டாரியா கூறியுள்ளார்.