July 27, 2018 தண்டோரா குழு
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மு.க.அழகிரி கோபாலபுரம் வந்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட காவிரி மருத்துவமனை நிர்வாகம்,சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.நோய் தொற்று காரணமாக யாரும் அவரை நேரில் சந்திக்க வேண்டாம் என கூறியிருந்தது.
இதற்கிடையில்,நேற்று முதல் தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் திமுக தொண்டர்களும்,கோபாலபுர இல்லத்தில் குவிந்த வண்ணமாக உள்ளனர்.இந்நிலையில் கருணாநிதியின் மகனும்,முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மதுரையில் இருந்து புறப்பட்டு இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு வந்துள்ளார்.