November 1, 2017 தண்டோரா குழு
கொல்கத்தாவில் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவரின் வயிற்றிலிருந்து சுமார் 639 ஆணிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள கோபர்டங்கா பகுதியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவர் ‘ஸ்கைசோபிரீனியா’என்ற மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் ஆணி மற்றும் மண்ணை சில காலமாகவே உண்டு வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அவருக்கு அதிக வயிற்று வலி ஏற்பட்டது.இதனையடுத்து அவருடைய குடும்பத்தினர் அவரை அருகிலிருந்த சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் ஆணிகளும் மண்ணும் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உடனே அவரை கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறிய ஆலோசனையை கேட்ட அந்த நபரின் குடும்பத்தினர், அவரை அங்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் எண்டோஸ்கோபி சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையின் முடிவில், அவருடைய வயிற்றில் 2 முதல் 2.5 இன்ச் அளவுள்ள ஆணிகள் மற்றும் மண் இருப்பதும் தெரியவந்துள்ளது.இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது “அவருடைய வயிற்றில் 10 சென்டிமீட்டர் அளவுக்கு வெட்டி,காந்தம் மூலம் வயிற்றில் இருந்த ஆணிகளை வெளியே எடுத்துள்ளனர். மேலும், இந்த அறுவை சிகிச்சை சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றதாகவும்,தற்போது நோயாளியின் உடல் நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.