• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் வாழ்த்து

October 17, 2016 தண்டோரா குழு

“பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நிர்வாகி” என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுபவர் டிரம்ப். இவர் கடந்த காலங்களில், “அமெரிக்க அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்து இங்கு சட்டத்திற்கு புறம்பாக குடிபெயர்ந்த அனைவரையும் அமெரிக்காவில் இருந்து விரட்டிவிடுவேன்” என்றும் “அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுகின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் தற்போது இந்தியாவின் மீது திடீரென பாசமழை பொழியத் தொடங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள எடிசன் நகரில் வாழும் அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இந்திய மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பங்கேற்று இந்திய முறைப்படி குத்து விளக்கை ஏற்றிவைத்தார் டிரம்ப்.

அக்கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா, அமெரிக்காவிற்கு நல்ல நட்புடைய நாடு. நான் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றால், எனது அரசின் நிர்வாகத்தின் கீழ் நாங்கள் மிகச்சிறந்த நண்பர்களாக இருப்போம். மேலும், இந்தியாவுடன் ஏராளமான வர்த்தகத்தை நடத்தி இருநாடுகளுக்கும் அபரிமிதமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

கடந்த 19 மாதங்களுக்கு முன்னர் நான் இந்தியாவுக்கு சென்றேன். இந்தியாவில் எனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். இந்தியா மீது எனக்கு உயர்ந்த நம்பிக்கையும் உண்டு. அதே போல், நான் இந்து மக்கள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகர். அமெரிக்காவின் அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், தங்களுக்கு ஒரு உண்மையான நண்பனாக இருப்பேன்.

மேலும், உங்கள் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும் ஒரு சிறந்த தலைவராக விளங்குகிறார். வரி விதிப்புகளை எளிமையாக்கி, வரிகளை நீக்கி ஆண்டுக்கு 7 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியாவை அவர் வழிநடத்தி செல்கிறார்.

இந்திய பொருளாதாரத்தையும், ஆட்சி முறையையும் சீரமைத்த உங்கள் நாட்டின் பிரதமர் மோடியுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். மிக உயர்ந்த மனிதரான அவரை நான் மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன். மேலும், பல தலைமுறைகளாக இந்து மக்களும் அமெரிக்க-இந்தியர்களும் அமெரிக்க நாட்டை வலிமைப்படுத்த உழைத்து வருகின்றனர். அழகிய நகரமான மும்பை மீதும், இந்திய நாடாளுமன்றத்தின் மீதும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகக் கொடூரமானது.

இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில் இந்தியாவை சேர்ந்த ஒரு உயர்ந்த நண்பரான பிரதமர் மோடிக்கு துணையாக இருப்பதை நான் மனமார ஆதரிக்கிறேன். ஒவ்வொரு வீரரோடு வீரராக நாமும் நின்று தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடி, வெற்றிப்பெற வேண்டும்.

இவ்வாறு டொனால்டு டிரம்ப் பேசினார்.

மேலும் படிக்க