December 5, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவிற்குள் நுழைய 6 முஸ்லிம் நாடுகளுக்கு விதித்த தடைக்கு அமெரிக்க நாட்டின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், அமெரிக்காவின் குடியரசு தலைவராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் சாட், ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வரகூடாது என்று அதிரடியாக தடை விதித்தார். டிரம்ப் விதித்த தடைக்கு எதிர்கட்சி உள்ளிட்ட பல தரப்பினர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து, அமெரிக்க குடியரசு தலைவர் டிரம்ப் அறிவித்த இந்த தடைக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கின் விசாரணை இன்று நடைப்பெற்றது.இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் விதித்த தடைக்கு அனுமதி வழங்கினார்.